மண்முனைப்பற்று படுகொலை சம்பவம்: நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

மண்முனைப்பற்று படுகொலை சம்பவம்: நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

மண்முனைப்பற்று படுகொலை சம்பவம்: நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 9:03 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 1990 ஆம் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி மண்முனைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், புதுக்குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்