பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி விவாகரத்துப் பெற முடிவு

பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி விவாகரத்துப் பெற முடிவு

பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி விவாகரத்துப் பெற முடிவு

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 3:52 pm

ஹொலிவுட்டின் பிரபல தம்பதியரான பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலி விவாகரத்துப் பெற முடிவு செய்துள்ளனர்.

ஜோலி, பிராட் பிட்டிடம் விவாகரத்து கோரியிருப்பதை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

தனது விவாகரத்து மனுவில், தன்னுடைய 6 குழந்தைகளையும் தன்னிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளாராம் ஜோலி.

பிராட் பிட்டால் குழந்தைகளைப் பொறுப்பாக வளர்க்க முடியாது என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

பிராட் பிட் – ஜோலி தம்பதி கிட்டத்தட்ட 10 ஆண்டு காலம் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தனர்.
2014 ஆம் ஆண்டு தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். செப்டம்பர் 15 ஆம் திகதியுடன் இருவரும் பிரிந்து விட்டனராம்.
41 வயதாகும் ஜோலியும், 52 வயதாகும் பிராட் பிட்டும் ஹொலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தவர்கள்.

நடிகையாக மட்டும் அல்லாமல், மனிதாபிமான நடவடிக்கைகளிலும், குறிப்பாக அகதிகள் மறுவாழ்வு தொடர்பாகவும் செயற்பட்டு வந்தவர் ஜோலி. இவரது ஆறு குழந்தைகளில் மூன்று பேர் தத்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

அதாவது கம்போடியா, வியட்நாமிலிருந்து இரு மகன்களையும் எத்தியோப்பியாவிலிருந்து ஒரு மகளையம் ஜோலி தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

பிராட் பிட்- ஜோலிக்குப் பிறந்த குழந்தைகள் மூவர் ஆவர். பிராட் பிட், ஏஞ்சலினா ஜோலிக்கு 3 ஆவது கணவர் ஆவார்.

அதற்கு முன்பு நடிகர் ஜானி லீ மில்லர், பில்லி பாப் தார்ன்டன் ஆகியோரை மணந்து பின்னர் பிரிந்தார் ஜோலி.

மறுபக்கம் பிராட் பிட்டுக்கு, ஜூலி 2 ஆவது மனைவி ஆவார். பிராட் பிட்டின் முதல் மனைவி நடிகை ஜெனீபர் அனிட்சன் ஆவார். 2003 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தனர். பின்னர் 2005 இல் பிரிந்து விட்டனர்.

ஜோலியுடன் பிராட் நெருக்கமாக இருந்ததை அறிந்தே அனிட்சன், பிராட் பிட்டைப் பிரிந்தார் என்று சொல்லப்பட்டது.

எவ்வாறாயினும், ஜோலியின் இந்த விவாகரத்து முடிவு குறித்து தாம் கவலையடைவதாக பிராட் பிட் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்