எழுபது தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர்

எழுபது தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 12:20 pm

அதிபர் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் நாட்டில் பல தேசிய பாடசாலைகளின் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

70 தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்கள் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

அதிபருக்கான பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற 40 பேரை தேசிய பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சில பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்ந்தும் அந்த பாடசாலைகளிலேயே கடமையாற்றுவதற்கு முயற்சித்து வருவதால், அதிபர் நியமனம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்