உமா ஒய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஹில் ஒய கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

உமா ஒய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஹில் ஒய கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 12:58 pm

உமா ஒய திட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஹில் ஒய கிராம மக்கள் இன்று எல்லை பிரதேச செயலக காரியாலயத்தினுள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் எல்லை பிரதேச செயலக காரியாலயத்தை முற்றுகையிட்டு முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படும் பொளசர் நீர் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாகவும் இதனால் தங்களின் அன்றாட செயற்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள முடியாமல் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக எல்ல பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் சில மணி நேரங்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை 1000 லிற்றர் நீரைப் பெற்றுத் தருவதாக எல்ல பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்