அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் உண்ணாவிரதம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2016 | 5:57 pm

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர், துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.

தம் மீதான சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இன்றிலிருந்து உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுதல் அல்லது தமக்கு எதிரான அனுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை வட மாகாண நீதிமன்ற எல்லைக்குள் மாற்றிக்கொள்தல் என்பவற்றிற்காக கடந்த மாதம் தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதிக்கு மஹஜர் அனுப்பி வைத்திருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்