வத்தளையில் அமைந்துள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ பரவியமை தொடர்பில் விசாரணை

வத்தளையில் அமைந்துள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ பரவியமை தொடர்பில் விசாரணை

வத்தளையில் அமைந்துள்ள பொலித்தீன் தொழிற்சாலையில் தீ பரவியமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 9:08 am

தீ பரவிய வத்தளையில் அமைந்துள்ள பொலித்தீன் தொழிற்சாலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த பொலித்தீன் தொழிற்சாலைக்கு சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது, என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் கே.எச்.மூதுகுட தெரிவித்தார்.

குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டார்.

குறித்த பொலித்தீன் தொழிற்சாலையில் பரவிய தீ தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின்சார ஒழுக்கு காரணமாகவா தீ பரவியது என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மின்பொறியியலாளர்கள் குறித்த தொழிற்சாலையில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல குடியிருப்புக்கள் மத்தியில் அமைந்துள்ள வத்தளை பகுதியில் பரவிய தீ சுமார் 8 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்