முறிகள் விநியோகம் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை குறித்து ஹந்துன்னெத்தி அதிருப்தி

 முறிகள் விநியோகம் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை குறித்து ஹந்துன்னெத்தி அதிருப்தி

 முறிகள் விநியோகம் தொடர்பான கோப் குழுவின் விசாரணை அறிக்கை குறித்து ஹந்துன்னெத்தி அதிருப்தி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:27 pm

சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் தொடர்பிலான கோப் குழுவின் விசாரணை அறிக்கை குறித்து வௌியிடப்படுகின்ற சில கருத்துக்கள் தொடர்பில் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற முறைகேடுகள் தொடர்பிலான கோப் குழுவின் விசாரணை அறிக்கை எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் நேற்று வார இறுதி நாளிதழ் ஒன்றில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை தொடர்பில் அனுமானங்கள் வௌியிப்பட்டிருந்தன.

கோப் விசாரணை அறிக்கை பெரும்பான்மை உறுப்பினர்களின் நிலைப்பாடு மற்றும் சிறு குழுவினரின் நிலைப்பாடு என்ற வகையில் இரண்டு அறிக்கைகளாக வௌியாக வாய்ப்புள்ளதாக அமைச்சரை மேற்கோள்காட்டி ஞாயிற்றுக்கிழமை லங்கா தீப பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

முறைகேடு இடம்பெறவில்லை என்பதே பெரும்பாலானவர்களின் நிலைப்பாடு என லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வௌியான கோப் குழுவின் முதலாவது அறிக்கையின் பிரகாரம் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 11 உறுப்பினர்களும் அதில் அடங்குகின்றனர்.

இவர்களை தவிர ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நான்கு உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணியின் நான்கு உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்களும் பொது எதிரணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் கோப் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்