மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 1:23 pm

மாத்தறை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்தார்.

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டில், 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

குறித்த நபர் மாத்தறை வட்டகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், 2013 ஆம் ஆண்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.45 மணியளவில் சிறைச்சாலையின், மலசலகூடத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில்,குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளினால் மீட்கப்பட்டார்.

அதனையடுத்து சிறைச்சாலை அதிகாரிகளினால் மாத்தறை பொது வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய சொய்தியாளர் தெரிவிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்