மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 9:40 am

மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் வீதியோரத்திலிருந்த மதிலில் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

செட்டிப்பாளையத்தை சேர்ந்த 30 வயதான ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்