மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் 19 வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் 19 வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் மூலம் 19 வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:24 pm

வாழ்வின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போன நிலையில் துயரையே வாழ்வாய் கொண்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நியூஸ் பெஸ்ட் முன்னெடுத்த மக்கள் சக்தி செயற்திட்டத்தினூடாக 19 வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளின் கால் தடங்கள் ஒரு தடவையேனும் தமது கிராமங்களில் படாதா என்ற ஏக்கத்துடன் வாழ்ந்த மக்களின் வாழ்வில் கடந்த 62 நாட்களாக புதிய நம்பிக்கைகள் துளிர் விட்டுள்ளன.

பல தசாப்தங்களாக பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தினூடாக பூரணப்படுத்தப்பட்டுள்ளன.

துயரத்தை மட்டுமே தமது வாழ்விற்கு அர்ப்பணித்த மக்களின் துயர் துடைத்து அந்த மக்களை ஒன்றிணைக்க மக்கள் சக்தி மக்கள் செயலணியின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதனூடாக தலைமைத்துவம் மற்றும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் மன உறுதியை வழங்குவதுடன் நம்பிக்கையுடன் சவால்களுக்கு முகங்கொடுக்கும் திராணியையும் மக்களுக்கு வழங்குகின்றது

நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வுக்கு புதிய அர்த்தத்தையும் இளைய தலைமுறையினருக்கு சக்தியையும் பெண்களுக்கான நம்பிக்கையையும் சிறுவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தையும் வழங்கி மக்கள் சக்தி செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது

கந்தக்குலிய பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ சமுத்ரசான்ன விகாரையின் சமூக அரங்கை புனரமைத்து கொடுக்கும் பணிகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்