மகன்கள் கடலில் மூழ்கி காணாமற்போனமையை கேள்வியுற்ற பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை

மகன்கள் கடலில் மூழ்கி காணாமற்போனமையை கேள்வியுற்ற பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை

மகன்கள் கடலில் மூழ்கி காணாமற்போனமையை கேள்வியுற்ற பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 10:42 am

தமது மகன்கள், பாசிக்குடா கடலில் மூழ்கி காணாமற்போனமையை கேள்வியுற்ற பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

இரண்டு இளைஞர்களும், நேற்று மாலை கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

நீரில் அள்ளுண்டு சென்றவர்களில் ஒருவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில் மற்றயவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

21 மற்றும் 18 வயதான இரண்டு பேரே காணாமற்போன நிலையில் 21 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்குடா பட்டியடிச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு காணமற்போயிருந்தனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற இளைஞர்களின் பெற்றோர் வீட்டுத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்