புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கவிராஜின் இறுதிக் கிரியை இன்று நடைபெற்றது

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கவிராஜின் இறுதிக் கிரியை இன்று நடைபெற்றது

புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த கவிராஜின் இறுதிக் கிரியை இன்று நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:20 pm

நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த கவிராஜ் ரவிசந்திரனின் இறுதிக் கிரியை இன்று நடைபெற்றது.

புஸ்ஸல்லாவையை சேர்ந்த 30 வயதுடைய கவிராஜின் சடலம் நேற்று 10 மணியளவில் புஸ்ஸல்லாவ ரொச்சில் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அந்த சந்தர்ப்பத்தில் அவரது வீட்டில் பிரதேச மக்கள் கூடியிருந்ததை
காணக்கூடியதாக இருந்தது.

மேலும் கவிராஜின் இறுதிக் கிரியைகளில் மகாவலி சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராத ஜயரட்ன மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.ராஜரட்னம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பொது மக்கள் குறித்த இளைஞனின் உயிரிழப்பு தொடர்பில் விசனம் வௌியிட்டுள்ளனர்.

நீதிமன்ற பிடியாணையின் பிரகாரம் கைது செய்யப்பட்ட இளைஞன் புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர் நேற்று முந்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் பொலிஸார் தாக்கப்பட்மையினாலேயே இளைஞன் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்திற்கு எதிர்பு தெரிவித்து நேற்று புஸ்ஸல்லாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று மாலை குறித்த இளைஞனின் சடலம் புஸ்ஸல்லாவ ரொச்சில் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் நீதிமன்றம் சடலத்தை தகனம் செய்வதற்கும் தடைவிதித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் சடலம் தகனம் செய்யாமல் புதைக்கப்பட்டது.

குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமைக்கு அடையாலங்கள் காணப்படுவதாக பேராதெனிய வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியால் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பரிசோதனைகளுக்காக உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு பேராதெனிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்