நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:16 pm

ஐக்கிய நாடுகளின் 71 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தனர்.

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர், பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா ஆகியோரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டம் நாளை முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது.

120 க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசத் தலைவர்கள் இம்முறை கூட்டத் தொடரில கலந்துகொள்கின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் பொதுச் சபையில் உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் இரண்டாவது தடவையாக உரைநிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை பொதுச் சபைக் கூட்டத் தொடர் மூன்று விடயங்களால் முக்கியத்துவம் பெறுகின்றது.

அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து முதற்தடவையாக ஏஅகதிகள் மற்றும் குடியேற்றவாசிகள் தொடர்பிலான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

அத்தோடு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஐநா பொதுச் சபை கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்.

10 வருடங்களாக ஐநா செயலாளர் நாயகமாக பதவி வகிக்கும் பான் கீ மூன் இம்முறை தனது கடைசி உரையை பொதுச் சபையில் நிகழ்த்தவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளின்டன் சர்வதேச நிதியம் ஏற்பாடு செய்துள்ள மாநாடொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்