நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டார்

நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டார்

நியூயோர்க் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் இனங்காணப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 6:39 pm

கடந்த சனிக்கிழமை மென்ஹேடன் ச்செல்சி பகுதியில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரை நியூயோர்க் அதிகாரிகள் இனங்கண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் வம்சாவளி அமெரிக்க பிரஜையான 28 வயதுடைய அஹமட் கான் ரஹாமி என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரின் புகைப்படத்தை அமெரிக்க பொலிஸ் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

இதேவேளை எலிசபேத்தில் நியூஜேர்சி பொலிஸாரால் வெடி பொருள் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

நியூ ஜேர்சி ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்ட்ட சந்தேக பொருளை ரோபோவின் உதவியுடன் பரிசோதிக்க முற்பட்ட வேளையில் அது வெடித்து சிதறியதாக அந்த பகுதிக்கான மேயர் கிறிஸ்டியன் பொல்வாக் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அமெரி்க்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெருவோர கமராக்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்