கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு

கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு

கொழும்பு பம்பலபிட்டி இந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 8:02 pm

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அதிபர் திரு. ஐயம்பிள்ளை ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபையின் உப தலைவர் கே.மதிவாணன் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, நுவன் குலசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.

கல்லூரியின் 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில், இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஊடக இந்த கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

14316900_1078295525558534_1088050611180866539_n 14322461_1078295752225178_2560036563522333426_n 14324317_564810120369503_793267949779928793_o 14361230_564810100369505_6896743757704375376_o 14409923_564809960369519_7705511315281610223_o


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்