ஏறாவூர் இரட்டைக் கொலை; மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

ஏறாவூர் இரட்டைக் கொலை; மூன்று சந்தேகநபர்களையும் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2016 | 7:05 pm

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் கைதான மூன்று சந்தேகநபர்களை தடுத்துவைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரிக்க ஏறாவூர் பொலிஸார் அனுமதி கோரிய நிலையிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தெகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீடொன்றினுள் நூர் முஹம்மது சித்தி ஜனீரா என்ற 55 வயதான தாயும் அவரது 34 வயது மகளான ஜனீரா பானு மாஹீரும் கடந்த 10 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 34 வயதான பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்