நடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி

நடிகர் பிரபுதேவா வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2016 | 10:04 am

நடிகர் பிரபுதேவா தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தேவி படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தில் வரும் ஒரு பாடலுக்காக படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

500 நடன கலைஞர்களுக்கு மேல் அதில் பங்கேற்றுள்ளனர்.

நடனமாடிக் கொண்டிருந்த போது நடந்த விபத்தில் பிரபுதேவாவின் முதுகு பகுதியில் அடிபட்டுள்ளது வலியால் துடித்த அவரை உடனே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவரை இரண்டு, மூன்று நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் கூறியிருப்பதாக, இந்த படத்தை தயாரிக்கும், நடிகர் Sonu Sood தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்