வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 8:56 pm

வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.ஏ. சரத்குமார, இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வட மாகாண பொலிஸ் உயரதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸ் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது.

சர்வமத பிரார்த்தனைகளின் பின்னர் காங்கேசன்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் கடமைகளை வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.ஏ. சரத்குமார ஆரம்பித்தார்.

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வட மாகாணத்தில் நியமிக்கப்பட்ட 5 ஆவது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்