புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம்

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சிதம்பரம்பிள்ளை துரைராஜா நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 7:15 pm

முன்னாள் மேலதிக சொலிஸ்டர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சிதம்பரம்பிள்ளை துரைராஜா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைப் பயின்ற துரைராஜா, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்று சட்டத்தரணியான அவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமாணி பட்டத்தைப் பெற்றார்.

1989 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை அரச சட்டத்தரணியாகவும், 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2007 ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட அரச சட்டத்தரணியாகவும் செயற்பட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதி சொலிஸ்டர் நாயகமாகவும், 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை மேலதிக சொலிஸ்டர் நாயகமாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்