சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள்: அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனை

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 9:55 pm

சேர். ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், 12 போட்டி சாதனைகள் மற்றும் ஒரு இலங்கை சாதனையுடன் இன்று முடிவுக்குவந்தது.

மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் அனிதா ஜெகதீஸ்வரன் இலங்கை சாதனையை நிலைநாட்டினார்.

தியகம மஹிந்த ராஜபக்ஸ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளின் நிறைவுநாள் இன்றாகும்.

இன்று காலை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.35 மீற்றர் உயரத்திற்குத் தாவிய அனிதா ஜெகதீஸ்வரன் புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.

மூவாயிரத்திற்கு மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபற்றிய இந்தப் போட்டிகளின் நிறைவு நாள் வைபவம் இன்று மாலை நடைபெற்றது.

போட்டிகளில் அதிசிறந்த வீராங்கனை விருதை அம்பலாங்கொட தர்மாஷோக கல்லூரியின் கே.கே. ரித்மா நிசாதி வென்றார்.

அதிசிறந்த வீரர் விருது நீர்கொழும்பு மரிஸ்டெலா கல்லூரியின் உஷான் திவங்க வசமானது.

மகளிர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வலல ஏ ரத்நாயக்க கல்லூரி அணி வெற்றிகொண்டது.

ஆடவர் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு மரிஸ்டெலா கல்லூரி அணி தட்டிக்கொண்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்