சூரியவெவயில் இரு தரப்பினரிடையே மோதல்: இளைஞர்கள் இருவர் வெட்டிக்கொலை

சூரியவெவயில் இரு தரப்பினரிடையே மோதல்: இளைஞர்கள் இருவர் வெட்டிக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 8:07 pm

சூரியவெவ – மீகஹஜதுர பகுதியில் இரு தரப்பினரிடையே நேற்று (14) ஏற்பட்ட மோதலில் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 9 மணியளவில் இந்த மோதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

சூரியவெவ – சுரெவிரகம பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரும், மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றதாகக் கூறப்படும் 22 வயது இளைஞரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த 22 வயதான இளைஞர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்பவர் என தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்