கைவிட்ட தமிழ் ரசிகர்கள்: சூர்யா எடுத்த அதிரடி முடிவு

கைவிட்ட தமிழ் ரசிகர்கள்: சூர்யா எடுத்த அதிரடி முடிவு

கைவிட்ட தமிழ் ரசிகர்கள்: சூர்யா எடுத்த அதிரடி முடிவு

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 5:28 pm

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எந்த ஒரு படமும் மாஸ் ஹிட் ஆகவில்லை.

24 படம் நல்ல விமர்சனம் என்றாலும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால், தெலுங்கில் படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

சூர்யா கடைசியாக நடித்த அஞ்சான், மாஸ், 24 மூன்றுமே தமிழில் பெரிதும் வெற்றியடையாத படங்கள் தான்.

இதனால், தன் அடுத்த சிங்கம் – 3 யை எப்படியாவது மாஸ் ஹிட்டாக்க வேண்டும் என காலில் சக்கரம் கட்டி வேலை பார்த்து வருகிறார்.

இப்படத்தை தமிழை விட தெலுங்கில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யவுள்ளாராம்.

ஏனெனில், சூர்யாவிற்கு தெலுங்கில் படத்திற்குப் படம் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கின்றது.

தமிழ் ரசிகர்கள் கைவிட்டாலும் சூர்யாவை தாங்கிப்பிடிக்க தெலுங்கு ரசிகர்கள் ரெடியாகவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்