கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர்; அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம்

கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர்; அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம்

கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர்; அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம்

எழுத்தாளர் Staff Writer

15 Sep, 2016 | 1:58 pm

ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் இளைஞன் ஒருவன் காணமல் போனமை தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த பணி நீக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கு அமைய , தங்கல்லை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரால் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று பொலிஸ் சார்ஜன்களும், கான்ஸ்ரபல் ஒருவருமே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைுனை கைது செய்வதற்கு சென்ற பொலிஸ் சார்ஜன்கள் இரண்டு பேரும், இந்த பணிக்கு பொறுப்பாக இருந்த ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அன்றைய தினம் பதில் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டிருந்த கான்ஸ்ரபல் ஒருவரே பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மற்றைய நபராவார்.

நெல் மூடைகளை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 20 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த ஐந்தாம் திகதி கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறுகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்