ஆலையடிவேம்பில் வயல் காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

ஆலையடிவேம்பில் வயல் காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2016 | 10:09 pm

அம்பாறை – ஆலையடிவேம்பிலுள்ள வயல் காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், தோணிக்கல், தோணிக்கல் மேல் கண்டம், தோணிக்கல் தென் கண்டம், டிப்போமடு ஆகிய பகுதிகளிலுள்ள வயல் காணிகளை சுவீகரிக்க வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முயற்சிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர்.

மக்களின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் அம்பாறை வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் வினவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்