வரட்சி காரணமாக 21,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வரட்சி காரணமாக 21,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

வரட்சி காரணமாக 21,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 8:48 am

வரட்சி காரணமாக 21,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வரட்சி காரணமாக மாகாவலி அதிகார சபைக்குட்பட்ட பல நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

சில நீர் தேக்கங்களை தவி்ந்த ஏனைய நீர்த்தேக்கங்களின் 30 வீதத்திற்கும் குறைவாக நீர் மட்டம் காணப்படுவதாகவும் இலங்கை மகாவலி அதிகார சபை கூறியுள்ளது.

எவ்வாறாயினும் விக்டோரியா நீர்த் தேக்கத்தில் 21 வீதமும் ரன்தனிகல நீர்த் தேக்கத்தில் 41 வீதமும் நீர் மட்டம் காணப்படுவதாக இலங்கை மகாவலி அதிகார சபை கூறியுள்ளது.

இதேவேளை நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையாக நீரை வழங்குவதற்கு கொத்மலை நீர்த் தேக்கத்தின் வான் தகவு ஒன்று திறந்துவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்