கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

கைதாகி காணாமற்போன ஹம்பாந்தோட்டை இளைஞர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 7:48 pm

ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போனதாகக் கூறப்படும் இளைஞர் தொடர்பில், இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு விசாரணைக் குழுக்களுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று உத்தரவிட்டார்.

ஹம்பாந்தோட்டை – பதகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான ஜீ.ஜீ.கயாஷான் காணாமற்போய் இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளன.

நெல் மூடைகளைத் திருடியமை தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பின்னரே குறித்த இளைஞர் காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

காணாமற்போன இளைஞரின் உறவினரை இன்று சந்தித்த பொலிஸ் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்