புதிய வட் வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய வட் வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

புதிய வட் வரி திருத்த சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 11:42 am

தனியார் துறையினால் முன்னெடுக்கப்படும் நோய் கண்காணிப்பு பரிசோதனைகள் , குருதி வடிகட்டல் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் உள்ளடக்கப்படாத வௌிநோயாளர் சேவைகளுக்கு வட் வரி விலகளிப்பதற்காக அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திருத்த சட்ட மூலத்தில் யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலத்திற்கான அனுமதி அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படவுள்ளது.

வருடாந்த 50 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேலதிகமான மொத்த மற்றும் சில்லரை வர்த்தகம் புதிய திருத்தங்களின் பிரகாரம் வட் வரி அறவீட்டிற்கு உட்படுத்தப்படும்

தொலை தொடர்பு சேவைகள் புகையிலை உற்பத்தி , சீனி அல்லது பலரச சேர்மானங்கள் அடங்கிய பால்மா என்பனவும் புதிய திருத்தங்களுக்கு அமைவாக வட் வரி அறவீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்