தம்புள்ளை பகுதியில் காட்டு யானையை கொலை செய்த இருவர் கைது

தம்புள்ளை பகுதியில் காட்டு யானையை கொலை செய்த இருவர் கைது

தம்புள்ளை பகுதியில் காட்டு யானையை கொலை செய்த இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 1:32 pm

தம்புள்ளை கவுந்தெவ அளுத்கம பகுதியில் காட்டு யானை ஒன்றை கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்கள் தங்களின் பயிர்நிலத்தில் மின்சாரம் பாய்ச்சி இந்த யானையை கொலை செய்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ரஞ்சித் விஜித் தெரிவித்தார்.

பின்னர் யானையை பாகங்களாக வெட்டி ஹூருலு ஓயாவில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்