குடிநீருக்காக 1.5 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டிய அசௌகரியத்தை நீக்கிய மக்கள் சக்தி 100 நாட்கள்

குடிநீருக்காக 1.5 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டிய அசௌகரியத்தை நீக்கிய மக்கள் சக்தி 100 நாட்கள்

குடிநீருக்காக 1.5 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டிய அசௌகரியத்தை நீக்கிய மக்கள் சக்தி 100 நாட்கள்

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 1:27 pm

மக்களுடன் இணைந்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் சக்தி நூறு நாட்கள் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கிளிநொச்சி பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கான நீர் கட்டமைப்பு இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

நூற்றாண்டு பழமைவாய்ந்த, கிளிநொச்சி பரந்தன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்வதில் சொல்லொண்ணா துன்பங்களை எதிர்நோக்கினர்.

இந்த பாடசாலையின் குடிநீர் பிரச்சினை தொடர்பில் பல முறை சுட்டிக்காட்டியும் உயிவர்களின் கவனம் திரும்பியிருக்கவில்லை.

தரம் ஒன்று முதல் ஒன்பது வரையான வகுப்பு மாணவர்களிதுனம், பாடசாலை சமூகத்தினதும் நலன் கருதி குடிநீர் திட்டமொன்றை கடந்த ஜூலை 20ஆம் திகதி நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி ஆரம்பித்தது.

மிக குறுகிய காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள, குடிநீர் திட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

குடிநீர் திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில், வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரை காலமும், குடிநீருக்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டிய அசௌகரியத்தை நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் நீக்கியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்