கிளிநொச்சி, இரணைத்தீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி

கிளிநொச்சி, இரணைத்தீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 8:41 am

கிளிநொச்சி, இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உரியவாறு முன்னெடுப்பதற்காக இந்த அனுமதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நியூஸ்பெஸ்டுக்கு கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்