உலக தலைவர்கள் குறித்து பான் கீ மூன் அதிருப்தி

உலக தலைவர்கள் குறித்து பான் கீ மூன் அதிருப்தி

உலக தலைவர்கள் குறித்து பான் கீ மூன் அதிருப்தி

எழுத்தாளர் Bella Dalima

14 Sep, 2016 | 3:31 pm

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், உலக தலைவர்கள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பான் கீ மூன், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளராக தான் பெற்ற வெற்றிகள், தோல்விகள், மனவேதனைகள் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

உலகத் தலைவர்கள் பலர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை விட, தங்களின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே அதிகக் கவனம் செலுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பஷார் அல் அசாத் என்ற ஒரு மனிதரால் சிரியா, விதியின் கையில் பிணையக் கைதி போல் சிக்கிக்கொண்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

தான் மனித உரிமைகள் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்து பலரும் தன்னைப் பதவி விலகச் சொல்வதாகக் குறிப்பிட்ட பான் கீ மூன், ஏனைய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை விட தான் அதிகமாகவே மனிதநேயம் குறித்துப் பேசியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகம் இன்று அனுபவித்து வரும் இன்னல்கள் மக்களால் வந்தது இல்லை. தலைவர்களால் உருவாக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என பல தலைவர்கள் கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒருமுறை தெரிவாகி விட்டால், மக்களை அடக்கி ஆண்டு, அதிகம் ஊழல் செய்து, மக்களின் குரல்களை மதிக்காமல் செயற்படுகின்றனர், என பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்