உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

14 Sep, 2016 | 1:11 pm

உமா ஓயா திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்து நட்டஈடு வழங்குமாறு ஊவா மாகாண விவசாயப் பணிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டத்தினால் நீர் வசதியை இழந்த குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக நீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளையைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் தாக்கல் செய்த மனு பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன், உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் அங்கம் வகித்த நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்