காவிரி நதி நீர் பிரச்சினை: கர்நாடக மற்றும் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் வேண்டுகோள்

காவிரி நதி நீர் பிரச்சினை: கர்நாடக மற்றும் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

13 Sep, 2016 | 9:48 pm

காவிரி நதி நீர் பிரச்சினையில் கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவால் பெங்களூரில் அமைதிச்சூழல் நிலவுவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகா மதிக்குமெனவும், காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுவதாகவும் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்