வடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது

வடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது

வடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 8:06 pm

வடமாகாண விவசாய கிணறுகளை புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று நடைபெற்றது.

யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார்.

வடமாகாண விவசாய அமைச்சினால் விவசாய கிணறுகளை புனரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண விவசாய அமைச்சர், வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது;

[quote]இங்குள்ள விவசாய கிணறுகளில் பல யுத்தத்தினால் அழிவடைந்து அதன் மேற்கட்டு பகுதிகள் கிணற்றின் ஏனைய பாகங்கள் சிதைவடைந்த நிலையில் இருக்கின்றன. கிணறுகளின் முழு உபயோகமும், அவற்றின் சிதைவடைந்த தன்மையால் பெற முடியா நிலை ஏற்பட்டது. இன்றைய இந்த நிகழ்வில் பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்ட 139 விவசாயிகளும், இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. குறைந்த தொகையினருக்கு கூடிய நிதியுதவி செய்யாது, கூடிய தொகையினருக்கு பகுதித் தொகை வழங்கி மீகுதியை அவர்களிடமே அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடிய பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி பங்குபோடப்படவுள்ளது. நிலத்தடி நீரினை பயன்படுத்தும் போது மிக அவதானமாக குறைந்த அளவு நீர் பாவனையுடன் கூடிய அறுவடையை பெறக்கூடிய விதத்தில், விவசாய நடவடிக்கைகள் அமைதல் வேண்டும்[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்