மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டமூடாக ஹம்பேகமுவ கிராமத்திற்கு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டமூடாக ஹம்பேகமுவ கிராமத்திற்கு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டமூடாக ஹம்பேகமுவ கிராமத்திற்கு நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 9:30 pm

நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்கள் குடிநீர் வசதியின்றி பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அவ்வாறு சிரமத்தை எதிர்நோக்கும் மற்றுமொரு பிரதேச மக்களுக்கான நீர்த்திட்டம், மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

தணமல்வில பிரதேச செயலாளர் பிரிவில் நீர் பிரச்சினையினால் ஹம்பேகமுவ மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தணமல்வில பிரதேச செயலாளர் பிரிவில் அதிகளவிலான சிறுநீரக நோயாளர்கள் இந்த கிராமத்திலேயே பதிவாகியுள்ளனர்.

நியூஸ் பெஸ்ட்டின் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக இந்த மக்களுக்கான சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கு கடற்படையினர் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

நியூஸ் பெஸ்ட் மக்கள் சக்தி 100 நாள் திட்டத்தின் ஊடாக தணமல்வில பிரதேச செயலாளர் பிரிவில் முன்னெடுக்கப்படும் மூன்றாவது திட்டம் இதுவாகும்.

ஏற்கனவே இரண்டு திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்