நானுஓயாவில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு

நானுஓயாவில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு

நானுஓயாவில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 1:06 pm

நானுஓயா – பங்களாவத்தை வனப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விறகு தேடுவதற்காகச் சென்ற சிலர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் நேற்று (11) மாலை சடலத்தை மீட்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் உருக்குலைந்து காணப்படுவதால் சடலத்தை அடையாளம் காண முடியவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் மூன்று மாத காலத்திற்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்