நாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது

நாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது

நாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 9:15 pm

இயற்கை எய்திய இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கர் நாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் பாராளுமன்றத் திடலில் இன்று மாலை நடைபெற்றன.

இயற்கை எய்திய இலங்கை ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கர் நாஉயனே அரியதம்ம தேரரின் பூதவுடலை தாங்கிய வாகனப் பேரணி, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஸ்ரீ கல்யாணதர்ம ஆச்சிரமத்தில் இருந்து இன்று பிற்பகல் புறப்பட்டது.

வாகனப் பேரணி பாராளுமன்றத் திடலை அண்மித்த சந்தர்ப்பத்தில், வான் மார்க்கமாக அனுநாயக்க தேரரின் பூதவுடலுக்கு மரலஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற பாராளுமன்ற திடலுக்கு வந்தவருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்தினார்.

மகா சங்கத்தினர் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் ராமஞ்ஞ பீடத்தின் அனுநாயக்கர் நாஉயனே அரியதம்ம தேரரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை இடம்பெற்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்