தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 7:25 pm

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆறு வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான முருகையா கோமகனும் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பிரதிநிதிகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இதன் போது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தௌிவூட்டும் வகையிலான துண்டு பிரசுரங்களும் யாழ் பஸ்தரிப்பிடத்தில் விநியோகிக்கப்பட்டன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்