காவிரிப் பிரச்சினை; கர்நாடகாவில் மீண்டும் வன்முறை

காவிரிப் பிரச்சினை; கர்நாடகாவில் மீண்டும் வன்முறை

காவிரிப் பிரச்சினை; கர்நாடகாவில் மீண்டும் வன்முறை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 7:31 pm

தமிழகத்திற்கு செப்டம்பர் 20 ஆம் திகதி வரை காவிரியில் நீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து கர்நாடகாவில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

பெங்களூர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வன்முறைகள் வலுப்பெற்றுள்ளன. பெங்களூரின் பல பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வீதிகள் தோறும் தனியார் அரச வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தீக்கிரையாக்கப்படுவதால் பாடசாலை மாணவர்களை வீட்டிற்கு உடனடியாக அழைத்து செல்லுமாறு பாடசாலை நிர்வாகம் வலியுறுத்தியதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் நாட்டு வாகனங்களை பெங்களூர் வீதிகளில் பயணிக்க வேண்டாம் எனவும் அந்த நாட்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கன்னட முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்துள்ள தமிழக அதிகாரிகள் கன்னட வாழ் தமிழர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பெங்களூரில் தற்போது 18,000 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திலும் வன்முறைகள் பதிவாகியுள்ளன.

கர்நாடக பதிவில் உள்ள 5 வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டுள்ளதுடன் வன்முறைச்சம்பவங்களில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திற்கு கர்நாடகாவில் இருந்து வருகை தந்த இரண்டு பேருந்துகள் நகராட்சி பேருந்து நிறுத்தத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் நியூஸ் பெஸட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்