ஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

ஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

ஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 9:47 am

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 2 பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருிகின்றன.

ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி முதலாவது ஒழுங்கையில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டனர்

55 வயதான தாயும் 32 வயதான மகளுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தாயும் மகளும் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன், உயிரிழந்த மகளின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணி புரிந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

வீட்டின் கூரை கழன்றுள்ளதால் சந்தேகநபர்கள் கூரையை கழற்றி வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தடயவியல் நிபுணர்களும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்