இளம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகுவதை தடுப்பது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி

இளம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகுவதை தடுப்பது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி

இளம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகுவதை தடுப்பது அனைவரினதும் பொறுப்பு – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

12 Sep, 2016 | 8:01 pm

போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டு வரப்படுவதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளை முறையாகவும் செயற்திறனுடனும் முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து அவர்களை சிறந்த மனிதர்களாக சமூகமயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ”மிதுரு மிதுரோ” அமைப்பினால் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி தெரிவித்ததாவது;

[quote]பழகுவதற்கு தகுதியானவர்கள் யார்? தகுதியற்றவர்கள் யார்? என்பதை புரிந்துகொள்வது சமூகத்தில் இருக்கும் பிரச்சினையாகும். போதைப்பொருளினால் நாளொன்றுக்கு நுாற்றுக்கும் அதிகமானவர்கள் நாட்டில் உயிரிழக்கின்றனர் என்பது நாம் அறிந்த விடயம். அத்துடன் நாளொன்றுக்கு போதைப்பொருளினால் நோய்வாய்ப்படுபவர்களின் எண்ணிக்கையை கூறுவது கடினமாகும். அதனால் இந்த அச்சமான சமூக தொற்றில் இருந்து எமது சமூகத்தை பாதுகாப்பது எம் அனைவரினதும் முக்கிய கடமையாகும். இளம் பிள்ளைகள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகுவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு முழு சமூகத்தையும் தௌிவூட்டும் அவசியம் எமக்கு புரிந்துள்ளது. தேசிய பாதுகாப்பு சபைக்குள் இது தொடர்பில் நாம் கலந்துரையாடி தேவையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கம், முப்படையினர், பொலிஸார், அரச அதிகாரிகளினால் மாத்திரம் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது. அதனால் இது அனைவரினதும் பொறுப்பாகும். அதனை வெற்றிக்கொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைவோம்.[/quote]

”மிதுரு மிதுரோ” அமைப்பின் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரொஷான் மஹானாமவை நியமிப்பதற்கான கடிதம் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

இந்த அமைப்பின் ஸ்தாபகரான குப்பியாவத்தே போதாநந்த தேரரினால், ஜனாதிபதியிடம் நூலொன்றும் கையளிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்