சிறைச்சாலை அதிகாரியொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

சிறைச்சாலை அதிகாரியொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

சிறைச்சாலை அதிகாரியொருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 2:14 pm

சிறைச்சாலை அதிகாரியொருவர் புன்ஞ்சி பொரளை பகுதியில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கமராவில் பதிவான காட்சிகளை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல தரப்பினரிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெகசின் சிறைச்சாலையில் ஒழுக்காற்று பிரிவிலுள்ள அதிகாரியே கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு மதவழிபாட்டு தலத்திற்கு சென்று திரும்புகையில், இவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான சிறைச்சாலை அதிகாரி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்