நக்கில்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ

நக்கில்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ

நக்கில்ஸ் மலைத்தொடரில் தொடர்ந்தும் தீ

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 9:11 am

நக்கில்ஸ் மலைத்தொடரை அண்மித்த யகனகல பகுதியில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவிவருகின்றது.

தீயை கட்டுப்படுத்த விமானப்படை மற்றும் இராணுவத்தின் உதவியை இன்றும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக இடர்முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றுக் காலை நக்கில்ஸ் வனப் பகுதியில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த விமானப்படையின் ஹெலிகொப்டரொன்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

அந்தப் பணிக்காக பெல் 212 ரக ஹெலிகொப்டரொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் குரூப்கெப்டன் சந்திம அல்விஸ் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்