கல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

கல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

கல்முனையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 11:15 am

கல்முனை பெரிய நீலாவணை பகுதியின் வீதியோரத்திலிருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று (11) அதிகாலை சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1 மணியளவில் குறித்த மூதாட்டியை காணவில்லை என அவரின் உறவினார்களால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரியநீலவானை பகுதியைச் சேர்ந்த 74 வயதான மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்