இன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவணையில் மாற்றம்

இன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவணையில் மாற்றம்

இன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவை கால அட்டவணையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2016 | 9:22 am

இன்று முதல் புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க மற்றும் குரண பகுதியில் உள்ள ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 3 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு ரயிலின் நேரத்தில் மாத்திரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கி பயணிக்கும் ரயில்,முற்பகல் 9.50 மணிக்கு நூர் நகரிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் ரயில் மற்றும் அதிகாலை 3.50 சிலாபத்திலிருந்து மருதானை வரை பயணிக்கும் ரயில் சேவை ஆகியன இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை முற்பகல் 4.50 க்கு சிலாபத்திலிருந்து மருதானை நோக்கி பயணிக்கும் ரயில் ,முற்பகல் 5.35 சிலாபத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்