மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு

மாவனெல்ல பகுதியில் இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2016 | 11:08 am

மாவனெல்ல மயூரபாத மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வாக்குவாதம் முற்றியதை அடுத்து, கூரான ஆயுதத்தால் குத்தப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நபர், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இதன்போது காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 வயதான பானகமுவ, அம்புலுகல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கைகலப்பில் உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்