பாராலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை

பாராலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை

பாராலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2016 | 4:51 pm

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த பிரிவில் கலந்துகொண்ட மற்றொரு இந்திய போட்டியாளர் வருண் சிங் பாட்டி வெண்கலம் வென்றுள்ளார்.

தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் தாண்டிய உயரம் 1.89 மீட்டர் ஆகும். அவருடன் போட்டியில் பங்கேற்ற சக போட்டியாளர் வருண் சிங் பாட்டி தாண்டிய உயரம் 1.86 மீட்டர் ஆகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த சாம் க்ரிவ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

 

499807-paralympics


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்