தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் எவ்வாறு வெற்றி பெறுவோம் என கூறுவோம் – பிரசன்ன ரணதுங்க

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாம் எவ்வாறு வெற்றி பெறுவோம் என கூறுவோம் – பிரசன்ன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2016 | 6:44 pm

இணக்க அரசாங்கத்தின் செயற்பாட்டினைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உருவாகிய எதிர்க்கருத்துக்களுடனான குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க ஊடகவியலாளர் சந்திப்பென்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்,

பிரசன்ன ரணதுங்க: எமது அரசியல் வரலாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச்சின்னத்தில் போட்டியிட்டு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெற்றி பெறவில்லை.

கேள்வி: ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கைச்சின்னம் என கூறியுள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற ரீதியில் சின்னம் ஒன்றும் இல்லை. கட்சிக்கு பெயருமில்லை.

பிரசன்ன ரணதுங்க: சின்னமும் கட்டடங்களும் பெயரும் எவரிடம் இருந்தாலும் ஆதரவாளர்களே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பலப்படுத்துகின்றனர்.

கேள்வி: கட்சி ஒன்று இல்லாததன் காரணமாக உள்ளூராட்சித் தேர்தலின் போது உங்களுக்கு பாரிய பிரச்சினை ஏற்படும் அல்லவா?

பிரசன்ன ரணதுங்க: உள்ளூராட்சி மன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தலில் நாம் எவ்வாறு வெற்றி பெறுவோம் என கூறுவோம்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்