கெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருடப்பூர்த்தி நிகழ்வுகள்

கெம்பல் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70 ஆவது வருடப்பூர்த்தி நிகழ்வுகள்

எழுத்தாளர் Bella Dalima

10 Sep, 2016 | 9:05 pm

இலங்கையின் முதலாவது பிரதமர் மற்றும் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியை உருவாக்கிய, ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது 70 ஆவது வருடப்பூர்த்தியைக் கொண்டாடுகின்றது.

”புதிய நாட்டில் முன்னோக்கிச் செல்ல எண்ணுபவர்கள் ஒன்றாக இணைவோம்” என்ற தொனிப்பொருளில் 7 தசாப்த ஞாபகத்தைக் கொண்டாடும் கூட்டம் இன்று நடைபெற்றது.

நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகை தந்த கட்சி உறுப்பினர்கள் பொரளை கெம்பல் மைதானத்தில் ஒன்று கூடினர்.

வருடப்பூர்த்தி நிகழ்வு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

வருடப்பூர்த்தி நிகழ்வின் விசேட விருந்தினராகக் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கட்சியை முன்னோக்கி இட்டுச் செல்வதற்கான புதிய கருத்துக்கள் அடங்கிய பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்