நாட்டின் பல பகுதிகளில் நீர் தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் நீர் தட்டுப்பாடு

நாட்டின் பல பகுதிகளில் நீர் தட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

07 Sep, 2016 | 8:44 am

நாட்டில் நிலவும் வெப்பத்துடனான வானிலையால் நாட்டின் பல பகுதிகளில் நீர் தட்டுப்பாடு நிலவுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

தென்மாகாணத்திலேயே இந்த நிலைமை அதிகம் காணப்படுவதாக சபையின் பொதுமுகாமையாளர் அஷோக்க குமாரரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை புத்தளம், அநுராதபுரம் ஆகிய பகுதிகளிலும் நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் தென்மாகாணத்தின் சில பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அஷோக்க குமாரரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

கங்கைகளின் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்